Skip to main content

அத்திவரதர் தரிசனம்: எடப்பாடியை புளந்து கட்டிய மோடி

Published on 24/07/2019 | Edited on 24/07/2019

 

அத்திவரதர் தரிசனத்தில் தமிழக அரசு ஏகப்பட்ட குளறுபடிகளை செய்துள்ளதால் பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அத்திவரதரை காண வருவது ரத்தாகியுள்ளது. 
 

வருகின்ற வாரத்தில் அத்திவரதரை காண்பதற்காக பிரதமரும், அமித்ஷாவும் வருவதாக இருந்தது. அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருக்கிறது என ஆராய மத்திய அரசின் டீம் ஒன்று காஞ்சிபுரத்திற்கு வந்தது. அங்கிருந்த ஏற்பாடுகளை பார்த்த அவர்கள், அத்திவரதரை தரிசிக்க பிரதமரும், உள்துறை அமைச்சரும் வந்தால் மகாமகத்தில் ஜெயலலிதாவும் சசிகலாவும் குளித்தபோது மக்கள் நெரிசலில் சிக்கி மரணம் அடைந்ததுபோல் ஏதாவது நிகழும் என மத்திய அரசுக்கு அறிக்கை கொடுத்தார்கள்.

 

edappadi palanisamy - narendra modi


 

இந்த அறிக்கையை வைத்து நிர்மலா சீத்தாராமன் தமிழக அரசிடம் பேசினார். வடஇந்தியாவில் கும்பமேளா நடந்தது. ஒரே நேரத்தில் பத்து லட்சம் பேர் குவிந்தனர். அதில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடக்காமல் உத்திரப்பிரதேச அரசு பார்த்துக்கொண்டது. அதற்கு முக்கிய காரணம் உத்திரப்பிரதேச அரசு போலீசை மட்டும் நம்பவில்லை. அவர்கள் பொதுமக்களை பாதுகாக்க தொண்டர்களை பயன்படுத்தினார்கள். 
 

காஞ்சிபுரத்தில் நடக்கும் அத்திவரதர் விழாவில் ஏற்கனவே ஐந்து பேர் மரணம் அடைந்துள்ளனர். அதுபோல நடைபெறால் இருக்க தொண்டர்களை பயன்படுத்துங்கள் என அட்வைஸ் செய்தார். தலைமைச் செயலாளரும், டிஜிபியும் காஞ்சிபுரம் சென்றார்கள். இந்த உரையாடல்களை கேள்விப்பட்ட நரேந்திர மோடி, எடப்பாடி பழனிசாமியிடம், நான் அத்திவரதரை சந்திக்கக் கூடாதா? என்று கேட்டிருக்கிறார். நீங்கள் வந்தால் நெரிசல் ஏற்படும் என உளவுத்துறை சொல்கிறது என எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார். 


 

இதனால் தனது விசிட்டை பிரதமரும், உள்துறை அமைச்சரும் ரத்து செய்துவிட்டார்கள். மறுபடியும் பிரதமர் அலுவலகத்தை தமிழக முதல்வர் அலுவலகம் தொடர்புகொண்டு, பிரதமர் விசிட் ரத்தானது மாநில அரசுக்கு அவமானமாக உள்ளது என வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள். அதைக்கேட்ட பிரதமர் அலுவலக அதிகாரிகள். இத்தகவலை பிரதமரிடம் சொல்லியிருக்கிறார்கள். தன்னிடம் தகவலை சொன்ன பிரதமர் அலுவலக அதிகாரிகளிடம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சுத்தமாக சரியில்லை என்பதையே காட்டுகிறது என்று கூறியிருக்கிறார். 
 

மேலும், தான் எப்போது தமிழ்நாட்டுக்கு போனாலும் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம், போராட்டம் என நடந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது மாநில அரசு தனது வருகை பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் என கருதுகிறது. இது எடப்பாடிக்கு நல்லது அல்ல. நிலைமை இப்படியே போனால் மத்திய அரசு சிறப்பு படைகளை தமிழ்நாட்டிற்கு அனுப்பி பிரதமர் உள்பட விஐபிக்கள் வருகையில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என தமிழக அரசுக்கு எச்சரிக்கை செய்யுங்கள் என்று பிரதமர் மோடி கூறினார். 


 

பிரதமரின் கோபத்தை கண்டு அஞ்சி நடுங்கிய எடப்பாடி பழனிசாமி, பிரதமர் அலுவலகத்தை மறுபடியும், மறுபடியும் தொடர்புகொண்டு பிரதமர் வர வேண்டும் என கெஞ்சியிருக்கிறார். அதைத்தொடர்ந்து பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிந்த பிறகு அத்திவரதர் எழுந்துநின்று அருள்பாலிக்கும் கடைசி நாட்களில் பிரதமரும், அமித்ஷாவும் காஞ்சிபுரத்திற்கு வர முடிவு செய்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 


 

சார்ந்த செய்திகள்