Skip to main content

நூதன முறையில் நகை திருடிய நாடிஜோதிடர்! 

Published on 25/02/2022 | Edited on 25/02/2022

 

Astrologer who stole jewelry in a modern way!

 

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள ஐவதுகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம். அவரது மனைவி கொளஞ்சி(60). இவர், நேற்று முன்தினம் பகல் நேரத்தில் வீட்டு வேலை செய்து கொண்டிருந்தபோது அங்கு ஒரு நபர் வந்து, தான் நாடிஜோதிடம் பார்ப்பதாகவும் அதன்மூலம் உடலில் உள்ள நோய்களை கண்டறிந்து அதற்கு தகுந்தாற்போல் சிகிச்சை எடுத்துகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார். 

 

அதனை நம்பி கொளஞ்சி, அந்த நாடி ஜோதிடரிடம் நாடி பார்த்துள்ளார். அப்போது அவர், “உங்களுக்கு கை கால்களில் மூட்டு வலி உள்ளது. அதோடு இடுப்பு வலியும் இருக்கிறது. அதனை உடனே சரிசெய்ய வேண்டுமானால், உங்களது கழுத்தில் அணிந்திருக்கும் தங்க செயினை கழற்றி கொடுங்கள். அதை நான் மாந்திரீகம் செய்து தருகிறேன்” என்று கூறியுள்ளார். 

 

அதனைத் தொடர்ந்து கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை கழற்றி ஜோதிடரிடம் கொடுத்துள்ளார். நகையை வாங்கியதும் அவர், பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து வரும்படி கொளஞ்சியிடம் கூறியுள்ளார். கொளஞ்சியும் தண்ணீர் எடுக்க உள்ளே சென்றுள்ளார். அப்போது அந்த நபர் தான் வந்த இருசக்கர வாகனத்தில் தப்பித்துள்ளார்.  தண்ணீர் எடுத்துக்கொண்டு வெளியேவந்தபோது அந்த நபர் இல்லாததைப் பார்த்து கொளஞ்சி அதிர்ச்சியடைந்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த, கொளஞ்சி, அதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார். ஊரில் இருந்த சிலர் தங்கள் இருசக்கர வாகனங்களை எடுத்துக்கொண்டு மாயமானவரை தேடி சென்றனர். ஆனால், அவரை கண்டுபிடிக்கவே முடியவில்லை. அதையடுத்து கொளஞ்சி வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் போலீசார் நாடி ஜோதிடர் எனக் கூறி நகை பறித்து சென்ற அந்த மர்ம மனிதனை தீவிரமாக தேடி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

120 செல்போன்களை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்த எஸ்.பி.

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Sp recovered 120 stolen cell phones and handed them over to their owners.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தவறவிட்ட செல்போன்கள் குறித்து காவல் நிலையங்களில் வழக்குகள் அடிப்படையில் உரிய விசாரணை மேற்கொண்டு ரூபாய் 20 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த 120 செல்போன்கள் காவல்துறை அதிகாரிகள் மூலமாக மீட்கப்பட்டது. மேலும் மீட்கப்பட்ட செல்போன்கள் அனைத்தும் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி தலைமையில் நடைபெற்று. அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது..

மேலும் நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில் செல்போன் தவறவிட்டாலோ, அல்லது திருடப்பட்டாலோ அது குறித்து உடனடியாக பொதுமக்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களில் சென்று புகார் அளிக்க முன் வர வேண்டும். அதேபோல் கடந்த மாதம் மட்டும் வாலாஜாபேட்டையில் செல்போன் தவறவிட்ட வழக்கில் ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான 30 செல்போன்கள் மீட்கப்பட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என இந்த நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

Next Story

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை கைது செய்ய போலீசார் தீவிரம்!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
 Police arrest to Former Minister MR Vijayabaskar

கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்து உள்ளனர் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு ஜூன் 21 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது கடுமையான விவாதங்களுக்கு பிறகு மூன்று தரப்பு வாதங்களைக் கேட்ட மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் ஜூன் 25 ஆம் தேதிக்கு மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்திருந்தார்.

இதனையடுத்து நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன் ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய வடமாநிலங்களுக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். வட மாநிலங்களுக்கு எம்.ஆர். விஜயபாஸ்கர் தப்பிச் சென்றதாக கூறப்படும் நிலையில் சிபிசிஐடி தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.