![fgh](http://image.nakkheeran.in/cdn/farfuture/vm4Xcr8387wBx8Hl4lvwtLD-h3nRqkuCwXjSWxlXutY/1642960050/sites/default/files/inline-images/45_48.jpg)
முதுபெரும் தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் நாகசாமி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் முதல் தொல்லியல் துறை இயக்குநராக பணியாற்றியவர் என்ற சிறப்புக்கு சொந்தக்காரரான நாகசாமி மிகவும் திறம்பட பணியாற்றியதால் பல்வேறு விருதுகளை மத்திய, மாநில அரசின் சார்பாக பெற்றுள்ளார். இவரது பணியை பாராட்டி மத்திய அரசாங்கம் கடந்த 2018ம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் இரங்கல்களை சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் பிரதமர் மோடி நாகசாமியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், " தமிழகத்தின் எழுச்சிமிக்க கலாச்சாரத்தை பிரபலப்படுத்துவதில் நாகசாமியின் பங்களிப்பை வரும் தலைமுறை மறக்க மாட்டார்கள். வரலாற்றின் மீதான அவரது ஆர்வம் வியக்கத்தக்கது. அவரின் மறைவு வேதனை தருகிறது" என்று தெரிவித்துள்ளார்.