நடிகை கஸ்தூரி அவர்கள் தினமும் பல்வேறு சமூக செய்திகள் மற்றும் அரசியல் பற்றி கிண்டலாக டிவிட்டரில் பேசுவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழகத்தில் அமமுக கட்சிக்கு "பரிசு பொட்டி" சின்னமாக வழங்கியது இந்திய தேர்தல் ஆணையம். இதனால் அமமுக கட்சி தொண்டர்கள் உற்சாகத்துடன் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அமமுகவுக்கு பரிசு பொட்டிக்கு பதிலாக வேறு சின்னம் வழங்கியிருந்தால் அந்த கட்சி சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது கடினமாக இருந்திருக்கும் .

அமமுகவுக்கு பரிசு பொட்டி சின்னம் கிடைத்ததால் மக்களிடம் எளிதாக கொண்டு சேர்க்க முடியும் என தொண்டர்கள் தெரிவித்தனர். அமமுகவுக்கு வழங்கப்பட்ட சின்னம் குறித்த நடிகை கஸ்தூரி அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்தை பதிவு செய்தார். இதில் அவர் கூறியதாவது பீரோ , சூட்கேஸ் , அண்டா , தங்கப்பதக்கம் இப்படி எதுவுமே இல்லையங்கறது ஏமாற்றம் தான். ஆனா பரிசுப்பொட்டியாமே ! Double Ok! என குறிப்பிட்டுள்ளார். இது குறித்து கஸ்தூரி அவர்களின் டிவீட் க்கு டிவிட்டரில் பலர் கேள்வி மற்றும் பதிலளித்து வருகின்றனர்.
பி . சந்தோஷ் , சேலம் .