Skip to main content

அமெரிக்கா புதிதாக கட்டமைக்கவிருக்கும் விண்வெளிப்படை!! டிரம்ப் ஆட்சி முடிவதற்குள் உருவாக்க முடிவு!!

Published on 10/08/2018 | Edited on 10/08/2018

 

america

 

 

 

அமெரிக்காவில் தரைப்படை, கடற்ப்படை, கப்பல்ப்படை,விமானப்படை, கடலோர பாதுகாப்புப்படை என ஐந்து படைகள் செயல்பட்டு வரும் நிலையில் புதியதாக 6-வது படையாக விண்வெளிப்படையை கட்டியமைக்க அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது.

 

கடந்த ஜூலையில் அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகனில் டிரம்ப் பேசுகையில் நாம் விண்வெளி அறிவியலில் பலம் கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது ஆனால் விண்வெளியில் நம் ஆதிக்கத்தைக்காட்ட வேண்டும் அதற்கு 6-வது படையாக விண்வெளிப்படையை உருவாக்க வேண்டும் என அறிவித்திருந்தார்.

 

அதனைத்தொடர்ந்து அந்த புதிய விண்வெளிபடை திட்டத்திற்கு அமெரிக்க பாராளுமன்றதில் ஒப்புதல் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு போன்ற காரணங்களால் காலதாமதம் ஏற்படும் என ஏற்கனவே அறிவிக்கபட்டறிந்த நிலையில் அமெரிக்காவின் துணை அதிபர்  மைக் பென்ஸ்  விண்வெளிப்படையை கட்டியமைக்கும் நேரம் வந்துவிட்டதாக  இன்று அறிவித்துள்ளார்.

 

விண்வெளியில்  சுற்றுவட்டப்பாதையில் ரஷ்ய, சீன செயற்கைகோள்கள் அமெரிக்காவின் செற்கைகோள்களின் அருகில் கொண்டுவரும் சூழ்ச்சி நடந்துவருகிறது எனவே அமெரிக்க செயற்கைகோள்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவே விரைவில் விண்வெளிப்படை கட்டமைக்கப்படும் எனவும் அதுவும் அதிபர் டிரம்ப் ஆட்சி முடிவதற்குள்,2020-ஆண்டிற்குள் புதிய விண்வெளிப்படை கட்டியமிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்