Published on 10/01/2019 | Edited on 10/01/2019
![Alanganallur union](http://image.nakkheeran.in/cdn/farfuture/hfCBFFNdBHI4bYkcvUDI1kGFCICAcxcgHr07yKu19Ek/1547127104/sites/default/files/inline-images/50.jpg)
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று ஜனவரி 9 முதல் 17 ஆம் தேதிவரை தமிழகம் முழுவதும் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அயயணக்கவுண்டன் பட்டி, வடுகபட்டி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ஜி.எல்.ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், ஒன்றியச் செயலாளர் இரா.கென்னடி, செயற்குழு உறுப்பினர் தனராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.