![dfgj](http://image.nakkheeran.in/cdn/farfuture/pMU9BKAuNsP_LkIxzNuBe-xbxPoUDO2sN3gmZag8FMs/1645157437/sites/default/files/inline-images/5656_19.jpg)
தமிழகத்தில் கடந்த ஒருமாதமாக நடைபெற்று வந்த உள்ளாட்சி தேரதல் பிரச்சாரம் நேற்று மாலையோடு நிறைவடைந்தது. அரசியல் கட்சியினர் ஒருவர் கடுமையாக விமர்சித்த நிலையில், சில இடங்களில் வேட்பாளர்கள் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டது. 10க்கும் மேற்பட்ட இடங்களில் வேட்பாளர்கள் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இறந்த சம்பவங்களும், அதன் காரணமாக அந்த குறிப்பிட்ட இடங்களுக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிகழ்வுகளும் நடைபெற்றது. இது ஒருபுறம் இருக்க மாவட்டங்களில் அமைச்சர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். பல முக்கிய பிரமுகர்களை அழைத்து வந்து தங்கள் மாவட்டங்களில் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தினர்.
அந்த வகையில் திமுகவை ஆதரித்து கடந்த சில நாட்களாக கோவை மாவட்டத்தில் திரைப்பட இயங்குநர் கரு.பழனியப்பன் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது, " கடந்த 8 மாத திமுக ஆட்சியில் என்ன திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று பார்க்க வேண்டும். நிர்வாகம் தெரிந்த காரணத்தால் தான் கரோனாவில் இருந்து முதல்வரால் மக்களை காப்பாற்ற முடிந்தது. மகளிருக்கான இலவச பேருந்து திட்டத்தை கிண்டல் செய்த பாஜக, இன்றைக்கு உ.பியில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச பயணம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மக்கள் மத்தியில் வெறுப்பை விதைப்பதற்கு பாஜகவை விட வேறு ஒரு ஆள் உலகத்திலேயே இல்லை. எனவே மக்கள் பாஜகவை எப்போதும் போல புறக்கணிக்க வேண்டும். அதிமுக பாஜகவின் கொத்தடிமையாகவே காலகாலத்துக்கும் இருக்கும். கூட்டணியை விட்டு செல்வது எல்லாம் தேர்தலுக்கான நாடகம்" என்றார்.