சென்னை கோயம்பேட்டில் குப்பைமேடாக கிடந்த இடத்தை சர்வதேச தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த புறநகர் பேருந்து நிலையமாக்க திட்டமிட்டு அடிக்கல் நாட்டியவர் கலைஞர். 1999ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 2001 தேர்தலுக்கு முன் உருப்பெற்றுவிட்டது. ஆனால், திமுக தோற்று ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார்.
சென்னையின் பெயர் சொல்லும் பலத் திட்டங்களை நிறைவேற்றியவர் கலைஞர். ஆனால், அவருடைய பெயரை மறைக்கும் வேலையை ஜெயலலிதா பக்காவாக செய்வார். அந்தவகையில்தான் கோயம்பேடு பேருந்து நிலையத்தை உருவாக்கிய கலைஞரின் பெயரையே மறைத்துவிட்டு, திறப்புவிழாவை நடத்தினார். அவருடைய, பெயரை பொன் எழுத்துக்களால் பொறித்துக்கொண்டார். அதன்பிறகு, 2006 ஆம் ஆண்டில் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், அன்றைக்கு உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின் முயற்சியால் கலைஞரின் பெயர் பொறிக்கப்பட்டது.
2011ல் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு கலைஞரின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டில் கலைஞரின் பெயர் சிதைக்கப்பட்டது. இன்றுவரை, அந்த பெயரை பொறிக்க அரசுக்கு மனமில்லை. அடுத்தவர் திட்டத்துக்கு உரிமை கொண்டாடும் அதிமுகவின் லட்சணம் இதுதான்!