தமிழ் புத்தாண்டையொட்டி, சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகளுக்கு இன்று (14/04/2022) மாலை 05.00 மணியளவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்தளித்தார்.
ஆளுநரின் தேநீர் விருந்தில் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பங்கேற்றனர். அ.தி.மு.க. சார்பில் தங்கமணி, வேலுமணி, தளவாய் சுந்தரம், விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்துக் கொண்டனர். அதேபோல், பா.ஜ.க. சார்பில் அண்ணாமலை, வானதி சீனிவாசன், குஷ்பூ, காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். பா.ம.க. சார்பில் சதாசிவம், வெங்கடேஸ்வரன் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
தேநீர் விருந்தின் போது, வானதி சீனிவாசன், அண்ணாமலை, எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், தங்கமணி, தளவாய் சுந்தரம், ஜி.கே.வாசன் ஆகியோர் ஒரே மேஜையில் அமர்ந்து உரையாடினர்.
எனினும், ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்காமல் தமிழக அரசு மற்றும் தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தன.