
வட இந்திய மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வரும் முன்பதிவு ரயில்களின் இருக்கைகளை, முன்பதிவு செய்யாத வட மாநில பயணிகள் ஆக்கிரமித்துக் கொள்வதால் தமிழர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து புகார்கள் கொடுக்கப்பட்டாளும் ரயில்வே நிர்வாகம் கண்டு கொள்வதில்லை என்று பயணிகள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், வாரணாசியிலிருந்து சென்னை திருப்பும் பயணிகள் இதுபோன்ற கடும் சிரமங்களை எதிர்கொண்டனர். இதில், தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகளும் சிக்கினர். இதனால் வாரணாசியிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரமுடியாமல் தவித்தனர். இந்த பிரச்சனையை துணை முதல்வர் உதயநிதியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழகம் திரும்பமுடியாத விளையாட்டு வீரர்களை அழைத்து வருவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் உடனடியாக செய்ய வேண்டுமென அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி உத்தரவிட்டார். மேலும் வீரர்கள் அனைவரையும் விமானத்தின் மூலம் தமிழகம் அழைத்து வாருங்கள் என்றும் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து உடனடியாக விமான டிட்கெடுகள் போடப்பட்டு, அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.