


Published on 10/06/2022 | Edited on 10/06/2022
சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சி மற்றும் திட்டப் பணிகள் குறித்தான கலந்தாய்வுக்கூட்டம் ஆர்ஏ.புரம் சமுதாய நலக்கூடத்தில் நடந்தது. சென்னை மேயர் பிரியா தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், அடையாறு மண்டலத்தில் உள்ள கோட்டம் 168 முதல் 180 வரையிலான வார்டுகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சி மற்றும் திட்ட பணிகள் குறித்த ஆலோசிக்கப்பட்டது. இதில் துணைமேயர் மகேஷ்குமார், ஆணையர் எம்.எஸ் பிரசாத், துணை ஆணையர் தெற்கு வட்டாரம் டாக்டர் எஸ் மனிஷ், அடையாறு மண்டல தலைவர் துரைராஜ், மண்டல அலுவலர் முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.