தமிழகத்தில் அதிமுகவுடன், பாஜக கூட்டணி வைத்திருப்பது விருப்பத்திற்கு மாறான கட்டாயக்கல்யாணமே என அதிர வைத்துள்ளார் புதுச்சேரியின் முதல்வரான நாராயணசாமி.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த புதுச்சேரி முதல்வர் தரிசனத்திற்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்தவர், " பாஜக அரசு 5 ஆண்டுகளில் தமிழக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அத்துடன் அதிமுக- பாஜக அமைத்துள்ள கூட்டணி என்பது விருப்பத்திற்கு மாறானக் கட்டாய கல்யாணம் போன்றது.
பாஜக அனைத்திந்திய முன்னேற்றக் கழகத்தை வற்புறுத்தி கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. மனப்பூர்வமாக கூட்டணி சேர்வதற்கு அதிமுகவிற்க்கு விருப்பம் இல்லை. அதிமுக அரசின் பின்புலத்தை வைத்து கொண்டு மோடி அதிமுக ஆட்சியை ஆட்டிப்படைக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்." என தெரிவித்து அதிரவைத்தவர், " பாஜகவின் "பி" அணியாக அதிமுக செயற்படுகின்றது என தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் தெரிவிக்கின்றனர்." எனவும் தெரிவித்தார்.
இதனையடுத்து, " பாகிஸ்தானுக்கு அனைத்து நாடுகளும் அழுத்தம் கொடுத்ததுடன் பிரான்ஸ், ஐநா சபைக்கு இந்த பிரச்சினையை கொண்டு வந்ததால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் விமான வீரரை விடுதலை செய்தார். இதை தனி ஒரு நபர் என்று பெருமை கொள்ளக்கூடாது என தெரிவித்ததுடன் மோடியின் திட்டம் என்னவென்றால் இந்தப் போரைக் காரணம் காட்டி தேர்தலை சந்திக்கலாம் என நினைத்தார். ஆனால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பஞ்சர் ஆக்கி விட்டார்." என உற்சாகமாக புறப்பட்டார் அவர்.