Skip to main content

திமுக வேட்பாளர் கதிர் ஆன்ந்த் முன்னிலை

Published on 09/08/2019 | Edited on 09/08/2019

 

வேலூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கையில் 9 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 38,051 வாக்குகள் பெற்று, 756 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

 

அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 37,295 வாக்குகள் பெற்றுள்ளார்.   நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 523 வாக்குகள் பெற்றுள்ளார்.

  

க்


வேலூர் மக்களவை தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர்.   தேர்தலன்று பதிவான வாக்குகள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகிறது. இதில், 9 மணி நிலவரப்படி கதிர் ஆனந்த் முன்னிலையில் உள்ளார்.

சார்ந்த செய்திகள்