அமலாகத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனுவை ஜூலை 12ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். ஒரு வருடத்திற்கு மேல் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் உள்ள நிலையில் ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவை தொடர்ச்சியாக தள்ளுபடி செய்திருந்தது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது, அப்போது அமலாக்கத்துறை தரப்பில் இந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளை மறு தினத்திற்கு (ஜூலை 12) தள்ளி வைத்துள்ளது.