கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கை பாண்டியாறு புண்ணம்புலா திட்டத்தை நிறைவேற்ற லேண்டும் என்பது. நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழை பெரும்பாலும் கேரளா பகுதிக்கே செல்கிறது. மேலும் மழை அதிகம் பெய்து பவானிசாகர் அணைக்கும் நொய்யல் ஆற்றிலும் கலந்து பெருமழை காலங்களில் வீணாக கடலில் கலக்கிறது. பாண்டியாறு புன்னம்புலா திட்டத்தை நிறைவேற்றினால் இந்த மூன்று மாவட்டத்திலும் உள்ள வறண்ட பகுதிகள், விவசாய நிலங்கள் செழிப்பாக இருக்கும் மக்களின் குடிநீருக்கும் மேலும் ஒரு லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன பகுதியாக மாறும் வீணாக கடலில் கலக்கும் நீரையும் தடுக்கலாம்.

இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என சுமார் 40 ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் இயக்கங்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்த கோரிக்கையை வலியுறுத்தி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக இன்று ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் இத்திட்டத்தை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து கண்டண ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தலைமை வகித்தார் இளைஞர் அணி செயலாளர் சூரியமூர்த்தி உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.