
நடிகை ஷகிலா மீது அவரது வளர்ப்பு மகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் உள்ள கோடம்பாக்கம் யுனைடெட் இந்தியா காலனியில் நடிகை ஷகிலா வசித்து வருகிறார். இந்த சூழலில் நடிகை ஷகிலாவுக்கும், அவரது வளர்ப்பு மகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஷகிலாவின் வளர்ப்பு மகள் சீத்தல், ஷகிலாவை அடித்து கீழே தள்ளிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து நடிகை ஷகிலா தனது தோழி நர்மதாவுக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து வழக்கறிஞர் சவுந்தர்யாவுடன் நர்மதா சென்றுள்ளார்.
நடிகை ஷகிலாவின் வளர்ப்பு மகள் சீத்தலை செல்போனில் அழைத்து சமாதானப்படுத்தி வைப்பதாக வழக்கறிஞர் சவுந்தர்யா அழைத்துள்ளார். இந்த பேச்சுவார்த்தையின் போது நடிகை ஷகிலா, வழக்கறிஞர் சவுந்தர்யா மீது அவரது வளர்ப்பு மகள் சீத்தல், சீத்தலின் தாய் சசி (வயது 45), சகோதரி ஜமீலா (வயது 22) ஆகியோர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் காயமடைந்த வழக்கறிஞர் சவுந்தர்யா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் சமாதானப்படுத்த சென்ற ஷகிலாவின் வழக்கறிஞர் சௌந்தர்யா மீது தாக்குதல் என காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.