Published on 11/08/2023 | Edited on 11/08/2023
![Actress Jayaprada sentenced to 6 months in jail](http://image.nakkheeran.in/cdn/farfuture/uqAcelkE2fD_JJ789RxCSFxE7DsMAqPYDRydWKQ8Luo/1691731858/sites/default/files/inline-images/actrees-jaya-pratha.jpg)
பிரபல நடிகையும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயப்பிரதாவுக்கு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜெயப்பிரதா. இவர் நடத்தி வந்த திரையரங்கில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கான இ.எஸ்.ஐ. தொகையை அரசு காப்பீட்டுக் கழகத்தில் செலுத்தவில்லை எனத் தொழிலாளர்கள் புகார் அளித்தனர்.
இதையடுத்து அரசு, காப்பீட்டுக் கழகத்தின் சார்பில், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நடிகை ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.