Skip to main content

மனித கடவுளான நடிகர் சூர்யா!

Published on 21/09/2020 | Edited on 21/09/2020

 

Actor Surya, the human god!-Fans club in thiruchy

 

நீட் தேர்வுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்த நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தேவையில்லை எனத் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

நீட் தற்கொலை குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்து, நீதிபதிகளையும், நீதிமன்றத்தையும் அவமதிக்கும் வகையில் உள்ளது எனக்கூறி சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் எழுதினார்.

இதையடுத்து நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஆறு பேர் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார்கள். இதுதொடர்பாக, நடிகர் சூர்யா மீது உயர் நீதிமன்றமே தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரலாமா என அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணிடம் கருத்துக் கேட்டது. ஆனால் நடிகர் சூர்யா மீது, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வழக்குத் தொடர தேவையில்லை எனத் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் தலைமை நீதிபதிக்கு அறிக்கை சமர்ப்பித்தார்.

தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்ததில், "நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எழவில்லை என அரசின் தலைமை வழக்கறிஞர் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அதை ஏற்றுக் கொள்கிறோம். எனவே நீட் தேர்வு தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது" என்றார்.

 

Actor Surya, the human god!-Fans club in thiruchy


இந்நிலையில், திருச்சியில் காய்கறி வியாபாரம் செய்துவரும் விக்னேஷ் 'மனித கடவுள் சூர்யா' ரசிகர்கள் நற்பணி மன்றத்தைத் துவக்கி, திருச்சி மாநகரம் முழுவதும் 6 பிட் போஸ்டர் ஒட்டியுள்ளார். இதுகுறித்து மனித கடவுள் சூர்யா ரசிகர்கள் நற்பணி மன்ற நிறுவனர் விக்னேஷிடம் பேசுகையில், 'ஆதவன்' படம் பார்த்ததிலிருந்து நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகரானேன்.

சூர்யா ரசிகர் நற்பணி இயக்கம் திருச்சியில் செயல்பட்டு வருகிறது. நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா பேசியது எனக்கு மிக முக்கியமாக தோன்றியது.  அதனால், திருச்சி மாவட்டத்தில் மனித கடவுள் சூர்யா ரசிகர் நற்பணி மன்றத்தைத் துவக்கி 7 ஆயிரம் ரூபாய் செலவில் திருச்சி மாநகரம் முழுவதும் ஆறு பிட் போஸ்டர் ஒட்டினேன். இதுகுறித்து மாநில நிர்வாகிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளேன்.

ஏழை எளிய மாணவர்களுக்குக் கல்வி அளித்துவரும், 'அகரம்' ஃபவுண்டேஷன் பணியானது இளைய தலைமுறையினர் வாழ்க்கையில் ஒளியேற்றும் வகையில் உள்ளது. 13 வருடம் தீவிர ரசிகராக இருந்த நான் மனித கடவுள் சூர்யா ரசிகர்கள் நற்பணிமன்றம் துவக்கி செயல்பட்டு வருகிறேன். மாநில நிர்வாகிகள் ஒப்புதலுக்காக தகவல் அனுப்பியுள்ளேன் என்றார்.

 

Actor Surya, the human god!-Fans club in thiruchy


மனித கடவுள் சூர்யா ரசிகர்கள் நற்பணி மன்ற போஸ்டரில் வாய்மையே வெல்லும் என அச்சிட்டு நடிகர் சூர்யா சட்டை காலரை தூக்கிப் பிடிக்கும் படம் இடம் பெற்றுள்ளது. அறம் வழி நடக்கும் புது சரித்திரமே, உங்கள் வழியில் ஒன்றிணைவோம். மாணவர்களோடு துணை நிற்போம் என அச்சிட்டு 29 ரசிகர்கள் பெயரும் 9 மாநில நிர்வாகிகள் படமும் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.

போஸ்டரின் பின்புலத்தில் கொடிகளுடன் ஆர்ப்பரிக்கும் கூட்டத்துடன் இளைஞர் ஒருவர் 'BANNED NEET EXAM' பதாகையைத் தூக்கிப்பிடித்தது போல், படமொன்று இடம் பெற்றுள்ளது.  திரைப்பட நடிகராக பார்க்கப்பட்ட சூர்யா தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் மனித கடவுளாகப் பார்க்கப்பட்டு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது திருச்சி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு; வெளியான முக்கிய அறிவிப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Important announcement For the attention of NEET students

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 16 ஆம் தேதி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு மார்ச் 16ஆம் தேதி வரை கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 10ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. 

மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நாளை (09-04-24) மற்றும் நாளை மறுநாள் (10-04-24) சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, www.nta.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பிட்ட அவகாசத்திற்குள் விண்ணப்ப முடியாதவர்களின் நலன் கருதி தேசிய தேர்வு முகமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

Next Story

'எனக்கு வேண்டாம் என் தம்பிக்கு சீட்டு கொடுங்க'-துரை வைகோவை ஆதரித்து கமல் பிரச்சாரம்

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
'I don't want; to give seat to my brother' - Kamal campaign in support of Durai Vaiko

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. 

இந்நிலையில் திருச்சியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், '' இந்தியாவில் எந்த இடத்தில் மத கலவரம் நடந்தாலும் தமிழ்நாட்டில் மிகக் குறைவு. அதுவும் திருச்சியில் இல்லை என்று சொன்னால் மிகை ஆகாது. நல்ல அரசு, நல்ல தலைமையின் அடையாளம் அது. அது தொடர வேண்டும் என்பதற்காக இங்கே வந்திருக்கிறேன்.

நான் மதிக்கும் மிக முக்கியமான புத்தகம் 'இந்திய அரசியலமைப்புச் சட்டம்' அந்த புத்தகம் பாதுகாக்கப்பட்டால் தான் நீங்கள் வணங்கும் மற்ற புத்தகங்கள் எல்லாம் பாதுகாக்கப்படும். எந்த புத்தகமாக இருந்தாலும் சரி. நான் மதம் சார்ந்த புத்தகங்களைப் பற்றி சொல்லவில்லை. அதை எழுதக்கூடாது, இதை படிக்கக்கூடாது என்று சொல்லும் பன்முகத்தன்மை, விரிந்த நோக்கம் இல்லாத எந்த அரசும் ஆபத்தானது. அவை குடியுரிமைச் சட்டங்கள் மற்றும் அரசியல் சட்டங்களின் மீது கை வைக்க தொடங்கும். அதைப்பற்றி விமர்சிக்க வேண்டியது என் கடமை. ஐந்தாண்டுக்கு ஒரு முறை அந்த கடமையை நீங்கள் செய்து கொண்டே இருந்தால்தான் நாடு நலமாக இருக்கும். நான் இங்கு சீட்டுக்காக வரவில்லை நாட்டுக்காக வந்திருக்கிறேன். எனக்கு ஒரு சீட்டு சின்ன பிள்ளையிலிருந்து கொடுத்து வைத்திருக்கிறீர்கள், இப்போது என் தம்பிக்கு சீட்டு கொடுங்க என கேட்கிறேன்.  '' என்றார்.