நடிகர் அல்வா வாசு காலமானார்

சென்னை சாலி கிராமத்தில் 40 வருடங்களாக மனைவி அமுதாவுடனும் மகள் கிருஷ்ணவேணி வயது 12 உடனும் வாழ்ந்து வந்தவர். இப்போது முடியாமல் கடந்த 5 மாத காலமாக சென்னையிலும், மதுரையில் மருத்துவம் செய்து வருகிறார். தற்போது முனிச் சாலையில் உள்ள வீட்டில் மூச்சு திணறல் நோயால் அவதிபட்டு மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்தார். தமிழகத்தை சிரிக்க வைத்த எனது கணவரை திரை துறையை சார்ந்தவர்கள் திரும்பி பார்க்க மறுக்கிறார்கள். தனது ஒரு மகளை வைத்து என்ன செய்யப் போகிறேன் என அவரது மனைவி கூறி வந்த நிலையில் வியாழக்கிழமை இரவு அவர் காலமானார்.
-ஷாகுல்