கடந்த மாதம் ராஜபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து அவதூறாகப் பேசியதாகவும், இதனால் ஆண்டாள் கோயிலுக்கு நேரில் வந்து வைரமுத்து மன்னிப்பு கேட்கக் கோரியும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் உண்ணாவிரதம் இருந்தார். இதையடுத்து அறநிலையத் துறை அதிகாரிகள், காவல்துறையினர் அரசு சார்பில் கேட்டுக்கொண்டதால் உண்ணாவிரதத்தை கைவிட்டதாக தெரிவித்தார்.
ஆனாலும், கவிஞர் வைரமுத்து திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு பிப். 3-ம் தேதிக்குள் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையெனில் உண்ணாவிரதத்தை மீண்டும் தொடர்வதாகவும் அறிவித்திருந்தார்.
காலக்கெடு முடிந்தும் கவிஞர் வைரமுத்து ஆண்டாள் கோயிலுக்கு நேரில் வந்து மன்னிப்பு கேட்காததால், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் கடந்த பிப்.8-ல் மீண்டும் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். இதையடுத்து ஓரேநாளில் மீண்டும் தனது உண்ணாவிரத போராட்டத்தை ஜீயர் கைவிட்டர். அதன்பின், வைரமுத்துக்கு எதிராக சட்ட ரீதியாக போராடுவேன் என்று அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஜீயரின் போராட்டத்தை முற்றிலும் கண்டுகொள்ளாத வைரமுத்து, வழக்கம் போல் தன் பணிகளை செய்து வருகிறார். அதன்படி, இன்று மாலை 6 மணிக்கு சென்னை, காமராஜர் அரங்கத்தில் மறைமலையடிகள் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை ஆற்றுகிறார்.
Published on 13/02/2018 | Edited on 13/02/2018