
வேலூர் மாவட்டம் குடியாத்தம், கர்நாடகா மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு குறைந்த விலையில் மது பாக்கெட்டுகள் வாங்கி வந்து விற்பனை செய்யப்படுவதாக குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் இன்று குடியாத்தம் அருகே ஆந்திரா தமிழக எல்லையில் அமைந்துள்ள பத்தலப்பல்லி சோதனைச் சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த நபரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அவர் கர்நாடகாவில் இருந்து மது பாக்கெட்டுகள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரிடம் இருந்து 520 கர்நாடக மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் மது பாக்கெட்டுகளை கடத்தி வந்த பேரணாம்பட்டு பகுதி சேர்ந்த அருண்குமார்(33) என்பவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.