Skip to main content

காவல்துறைக்கு கிடைத்த ரகசியத் தகவல்; சுற்றி வளைத்த போலீஸ் - சிக்கிய கடத்தல் கும்பல்!

Published on 06/03/2025 | Edited on 06/03/2025

 

37 tons of ration rice smuggled from Chennai  Karnataka Andhra Pradesh

சென்னையில் தொடர்ச்சியாக அரசு ஏழை எளிய மக்களுக்காக வழங்கப்படும் ரேசன் அரிசியை வெளிமாநிலங்களுக்கு கடத்தப்பட்டு வரும் சம்பவம் அரங்கேறிக்கொண்டே இருக்கிறது. அதனைத் தடுக்கும் வகையில் காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

37 tons of ration rice smuggled from Chennai  Karnataka Andhra Pradesh

அந்த வகையில் சென்னை செங்குன்றம் அருகே உள்ள பாடிய நல்லூரில் வழியாக கர்நாடகாவுக்கு ரேஷ அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் டி.எஸ்.பி. தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கடத்தல் கும்பலை சுற்றி வளைத்து மூன்று லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் அதில் 37 டன் அரிசியையும் பரிமுதல் செய்தனர். 

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் இந்த கடத்தலுக்கு மூலையாக இருந்தது சென்னையைச் சேர்ந்த அரிசி கடத்தல் மன்னன் சந்தோஷ் என்பது தெரியவந்தது. சென்னையில் உள்ள சிறுகுறு வியாபாரிகளிடம் இருந்து அரிசியை பெற்றுக்கொண்டு செங்குன்றம் அருகே உள்ள குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு பின்பு அங்கிருந்து ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்து வந்துள்ளார். அப்படி வழக்கம் போல் சந்தோஷ் அரிசியை கடத்தும் போதுதான் போலீசாரிடம் பிடிப்பட்டுள்ளார். 

37 tons of ration rice smuggled from Chennai  Karnataka Andhra Pradesh

இதனைத் தொடர்ந்து சந்தோஷ் மற்றும் அவரது கும்பலை  மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த நடவடிக்கையை ஐஜி சீமா அகர்வால் பாராட்டியதோடு மேலும் இது போன்ற சம்பவம் தொடர்கதையாகவே உள்ளதே தவிர, இதற்கான முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உடனடியாக சென்னையில் உள்ள முழு நெட்வொர்க்கையும் கண்டறிய விரிவான விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளாராம்.  

சார்ந்த செய்திகள்