Skip to main content

மூன்று மாதத்தில் 369 பேர் கைது! திருச்சி காவல்துறை அதிரடி! 

Published on 09/05/2022 | Edited on 09/05/2022

 

369 arrested in three months! Trichy Police Action!

 

திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் மீது நடப்பாண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 61 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


மேலும், காந்தி மார்க்கெட் பகுதியில் கஞ்சா விற்பனை செய்துவந்த தமிழ்செல்வி (52), பாலக்கரை பகுதியில் நவலடியான் (46), எ.புதூர் பகுதியில் குமார் (எ) வெள்ளெலி குமார் (40) மற்றும் கே.கே.நகர் பகுதியில் சக்திவேல் ஆகிய 4 பேரை குண்டர் காவல் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 


அரசு அனுமதியோ, உரிய அரசு சான்றிதழோ இல்லாமலும், மருத்துவரின் ஆலோசனை கடிதம் இல்லாமலும் சட்ட விரோதமாக போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் விற்பனை செய்த நபர்கள் மீது 3 வழக்குகள் பதிவு செய்யபட்டு, 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 1550 போதை மாத்திரைகள் மற்றும் 80 போதை மருந்து பாட்டில்களை கைப்பற்றி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.  அதில் அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த், ஷெப்ரின், வில்சன் ஆகிய 3 பேர் குண்டர் காவல் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 


திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில், நடப்பாண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் மீது 296 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 296 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா, போதை மாத்திரை மற்றும் ஊசிகள் விற்பனை செய்த 369 நபர்கள் இதுவரை திருச்சியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்