Published on 08/09/2021 | Edited on 08/09/2021
சேலத்தில் நடு சாலையில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வானுயர பீய்ச்சியடிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்ட வீரபாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எஸ்.பாப்பாரப்பட்டி என்ற இடத்தில் மேட்டூர்- தலைவாசல் இடையிலான கூட்டுக்குடிநீர் திட்டக்குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு 30 அடி உயரத்திற்குத் தண்ணீர் வெளியேறி வருகிறது. இந்த சம்பவத்தை அடுத்து அங்குள்ள மக்கள் நீர் வானுயர பீய்ச்சியடிப்பதை ஆச்சரியத்துடன் பார்க்கக் கூடியுள்ளனர். உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பீய்ச்சியடிக்கும் இடத்திற்கு மேலேயே மின்சாரக் கம்பி உள்ளது. இதுகுறித்து குடிநீர் வாரியத்திற்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், உடனடியாக இந்த உடைப்பு சரி செய்யப்பட வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி தற்பொழுது வைரலாகி வருகிறது.