Published on 10/02/2023 | Edited on 10/02/2023

தென்காசி மாவட்டத்தில் மிகப்பிரபலமான சுற்றுலாத்தலமான குற்றாலம் பகுதியில் அமைந்துள்ள பார்டர் பரோட்டா கடையில் கெட்டுப்போன இறைச்சிகளை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டதோடு கடைக்கும் சீல் வைக்கப்பட்டது.
குற்றால அருவிகளில் குளித்து முடித்தவுடன் சுற்றுலாப் பயணிகள் அசைவ உணவகங்களை தேடிச் செல்கின்றனர். பார்டர் பரோட்டா கடை எனப் பிரபலமாக இயங்கும் கடையில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், இன்று அதிரடியாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அக்கடையில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், கடைக்காக சமைக்கப்படும் குடோனிலும் ஆய்வு செய்தனர். அதில் பயனற்று கிடந்த நான்கு மூட்டை மிளகாய் வத்தலை பறிமுதல் செய்தனர். மேலும், 200 கிலோ கெட்டுப்போன இறைச்சியையும் பறிமுதல் செய்ததோடு குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.