Skip to main content

இரண்டாவது நாளாக தொடரும் லாரி வேலை நிறுத்தம்!!

Published on 21/07/2018 | Edited on 21/07/2018

நாடுமுழுவதும் இன்று இரண்டாவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.

 

lorry

 

 

 

சுங்கச்சாவடியில் சுங்ககட்டணம் வசூலிக்கும் முறையை மாற்றி ஆண்டுக்கு ஒருமுறை சுங்ககட்டணம் வசூலிக்க வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.வரி வரம்பிற்குள் கொண்டுவந்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும், மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டண தொகையை நீக்க வேண்டும் போன்ற பல கோரிக்கைகளுடன் நாடு முழுவதுமுள்ள லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் அறிவித்தனர்.

 

 

 

தற்போது இந்திய அளவில் 90 லட்சம் லாரிகள் மற்றும் மினி லாரிகள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் தமிழகத்தில் மட்டும் 4.5 லட்சம் கனரக வாகனங்களும் ஒன்றரை லட்சம் மினி லாரிகளும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன. இரண்டாவது நாளாக தொடரும் இந்த வேலைநிறுத்தத்தில்  கேஸ் டேங்க் லாரி உரிமையாளர்களும் பங்குபெறுவதாக அறிவித்துள்ளனர். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை இன்னும் சிலநாட்களில் கூட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  

சார்ந்த செய்திகள்