
திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி ஒருவர் தனது தாத்தா மற்றும் பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். இத்தகைய சூழலில் தான் சிறுமியின் உடல் நிலையில் மாற்றம் எற்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுமியை அருகில் உள்ள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சிறுமி 4 மாதம் கருவுற்று இருப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த சிறுமியின் உறவினர்கள் சிறுமிடம் விசாரித்துள்ளனர். அப்போது 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பகீர் தகவலை தெரிவித்தார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் இந்த சம்பவம் குறித்து உடுமலைப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் இந்த சம்பவத்தில் தொடர்புடையே 3 சிறுவர்கள் 9 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அதில் 6 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். 3 சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்ட 3 சிறுவர்களின் வயதுகள் முறையே 14, 15 மற்றும் 16 என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொடூர சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.