Published on 15/05/2022 | Edited on 15/05/2022

ஈரோடு அருகே கட்டுப்பாட்டை இழந்த மினிவேன் சாலை தடுப்பில் மோதி 15 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த மினி பேருந்து பெத்தாம்பாளையம் பிரிவு பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது பலமாக மோதியது. இதில் வேனில் பயணம் செய்து கொண்டிருந்த 15 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.