Skip to main content

'10- ஆம் வகுப்பு மாணவர்கள் எதிர்பார்க்கும் முடிவை எடுங்கள்'- மு.க.ஸ்டாலின் ட்வீட்!

Published on 09/06/2020 | Edited on 09/06/2020

 

10th public exam dmk party mk stalin tweet


தெலங்கானா மாநிலத்தில் 10- ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வின்றி அனைவரும் தேர்ச்சிப் பெற்றதாக அறிவிக்க அம்மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பையும் தெலங்கானா அரசு வெளியிட்டுள்ளது. இதேபோல் தமிழகத்திலும் 10- ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி அனைவரும் தேர்ச்சிப் பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தமிழக அரசை வலியுறுத்தி உள்ளனர். 
 


இந்த நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "10- ஆம் வகுப்பு மாணவர்கள் எதிர்பார்க்கும் முடிவை அரசு எடுக்க வேண்டும். பிடிவாதம், வறட்டு கவுரவம், மாறாப் போக்கை விடுத்து மாணவர்கள் எதிர்பார்க்கும் முடிவை எடுங்கள். எடுக்கும் முடிவில் மாணவர் எதிர்காலம் மட்டுமல்ல; மாநிலத்தின் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்