Skip to main content

கமல் பிரச்சனை! திமுக மவுனம் ஏன்?

Published on 17/05/2019 | Edited on 17/05/2019

அரவக்குறிச்சி பிரச்சாரத்தின் போது கமல்ஹாசன் பேசிய இந்து தீவிரவாதம் என்ற கருத்துக்கு கண்டனம் மற்றும் ஆதரவு கருத்துக்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் திமுக இந்த பிரச்சனையை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்று அரசியல் கட்சியினர் விவாதத்தை கிளப்பியுள்ளனர். கமல் பேசியதற்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி இப்படியே கமல் பேசினால் அவரது நாக்கை அறுத்து விடுவாங்க என்று கூறிய கருத்து அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பொது மக்கள் மத்தியிலும் பெரும் கண்டனத்துக்கு உள்ளானது. 

 

kamal



எந்த பிரச்சனை என்றாலும் உடனடியாக கருத்து தெரிவிக்கும் திமுக, இந்த விஷயத்தில் மவுனம்  காப்பது ஆச்சரியமாக இருப்பதாக டுவிட்டரில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். வீரமணி, வைகோ, திருமாவளவன் உள்பட திமுகவின் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கமலின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தும் திமுக மெளனமாக இருப்பது தேர்தல் அரசியலின் ஒரு ராஜதந்திரமே என்றும் கமலுக்கு ஆதரவாக பேசினாலும் எதிர்ப்பு தெரிவித்து பேசினாலும் அது தேர்தலில் அவருக்கு சாதகமான ஒரு முடிவை ஏற்படுத்தும் என்பதால் திமுக தலைவர்கள் அமைதியாக இருப்பதாகவும், மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் முடிந்தவுடன் திமுக தரப்பில் இருந்து இதுகுறித்து கருத்துக்கள் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. 


மேலும் கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு யாரும் ரியாக்ட் செய்ய வேண்டாம் என திமுக மேலிடத்தில் இருந்து கட்சியினருக்கு மறைமுகமாக உத்தரவு வந்திருப்பதாகவும் இதனால் தான் கமல்ஹாசன் கருத்துக்கு எந்தவித ரியாக்சனும் இன்றி திமுகவினர் மெளனமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்