
"கரோனா காலத்தில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கரோனாவை எப்படி கட்டுக்குள் கொண்டு வருவது என்று தீவிர ஆலோசனையில் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. இருந்தும் செய்தியாளர்கள் சந்திப்பில் கரோனா கட்டுக்குள் இருக்கிறது என்று எடப்பாடி அரசு சொல்லிவருகிறது, இந்நிலையில் அரசு நியமித்த மருத்துவ ஆலோசனை குழுவோடு 26-ந் தேதி முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
அப்போது உலக சுகாதார துறையைச் சேர்ந்த சௌமியா சாமிநாதனும் இந்தக் கூட்டத்தில், நியூயார்க்கில் இருந்தபடியே வீடியோ கான்பரன்ஸிங் மூலம் கலந்துக் கொண்டார். அப்போது நீங்கள் கரோனாவை கட்டுப்படுத்துவதில் தவறிவிட்டீர்கள். ஒருநாளைக்கு குறைந்த பட்சம் 18 ஆயிரம் பேருக்காவது தொற்றுப் பரிசோதனை நடத்த வேண்டும், ஆனால் நீங்கள் 11 ஆயிரம் பேரை இன்னும் தாண்டவில்லை. தமிழகத்தில் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கணக்கை மறைப்பதால் கரோனா பாதிப்பின் அளவு குறைந்துவிடாது என்று கடுமையாக விமர்சித்துள்ளார். அதனால்தான் அவரது பேச்சு விபரத்தை அரசு முறைப்படி வெளியிடவில்லை என்று சொல்லப்படுகிறது.