!["We are not slaves to anyone; The Chief Minister is cheating on the Cauvery issue''-EPS speech](http://image.nakkheeran.in/cdn/farfuture/91VsUaIaopzAm_LDNBkKFpyZzQnPfRwpW5N361voHWA/1689947736/sites/default/files/inline-images/z23_17.jpg)
அதிமுகவின் தொண்டர்களும், நிர்வாகிகளும் எந்தக் கட்சிக்கும் அடிமை இல்லை என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ''திமுகவினர் போல் கொள்ளையடித்த பணத்தை காப்பாற்றுவதற்காக நாங்கள் அடிமையாக இருக்கமாட்டோம். எப்பொழுது பார்த்தாலும் ஸ்டாலின் சொல்கிறார்... ‘எடப்பாடி பழனிசாமி பாஜக கட்சிக்கு அடிமை’ என்று. நாங்கள் எப்பொழுதுமே எந்த கட்சிக்கும் அடிமை இல்லை என்பதை பலமுறை தெளிவுபடுத்திவிட்டேன். உங்களைப் போல் கொள்ளையடித்த பணத்தை காப்பாற்றுவதற்காக நீங்கள் அடிமையாக இருக்கலாம். ஆனால் அதிமுகவின் தொண்டனும் சரி, நிர்வாகிகளும் சரி எவரும் எந்த கட்சிக்கும் அடிமை இல்லை என்பதை மீண்டும் தெளிவுபடுத்துகிறேன்.
காவிரி நீர் விவகாரத்தில் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதி முதலமைச்சர் மக்களை ஏமாற்றுகிறார். பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின் அங்கு தமிழகத்தின் பிரச்சனை குறித்து பேசவில்லை. நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் தமிழக உரிமைக்காக குரல் கொடுக்கவில்லை. எங்கள் கூட்டணி ஆட்சியிலிருந்தாலும் அதையும் எதிர்த்து அத்தனை பிரச்சனைக்காக நாடாளுமன்றத்தை 22 நாட்கள் முடக்குகிற அளவுக்கு குரல் கொடுத்த கட்சி அதிமுக'' என்றார்.