விருதுநகரில் நடைபெற்ற அரசு போக்குவரத்துக்கழக அண்ணா தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, “சம்பள பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். 2,500 ரூபாய் கொடுக்கக்கூடிய வள்ளலின் ஆட்சியாக எடப்பாடியார் ஆட்சி இருக்கிறது.
எடப்பாடியாருக்கு, கொடுக்கின்ற மனம் நிறைய இருக்கிறது. தி.மு.க.வினர் அவரை விட்டேனா பாருன்னு சொல்லி, ஆட்சியில் உட்கார்ந்ததில் இருந்து கவிழ்ப்பதற்கு சேரைப் பிடித்து இழுத்துத்தான் பார்க்கிறார்கள். அவர் கம்பீரமாகத்தான் உட்கார்ந்திருக்கிறார். சேர் வந்தால்தானே? அதான் போல்ட் போட்டு இறுக்கிருக்கோமே. ஸ்டாலின் இழுத்து இழுத்துப் பார்த்தாரு. இப்ப ரோட்ல இறங்கி தெருவுக்குள்ள போயிட்டாரு. தெருவுல உட்கார்ந்துட்டாரு. என்னன்னு கேட்டா, கிராமசபைக் கூட்டமாம். கிராமசபைக் கூட்டம் நடத்துறதுக்கு பிரசிடென்ட் இருக்காரு. அவரு செய்யமாட்டாரா? உங்களுக்கு எதற்கு இந்த வேலை? ஊர் ஊருக்குப் போய் கூட்டம் போடறேன்னு சொல்லிக்கிட்டு. பெண் கேள்வி கேட்டால், சண்டைக்குப் போறாரு. மனு வாங்கிறீங்க. எங்கே கொடுப்பீங்க? விருதுநகர்ல கூட்டம் போடறாரு. மனு வாங்கி யாருகிட்ட கொடுப்பீங்கன்னு கேட்டால், நான் ராஜேந்திரபாலாஜிகிட்ட கொடுப்பேன்னு சொன்னால், கோபம் வராதா? இதை நாங்களே கொடுத்துக்க மாட்டோமா? நீங்க எதுக்கு வர்றீங்க? இந்தக் கேள்விதான் பிரச்சனை.
இப்ப கோயம்புத்தூர்ல. பூங்கொடிங்கிற பெண், இந்த மனுவெல்லாம் எங்கே கொடுக்கப் போறீங்க? உங்ககிட்ட மனு கொடுக்கிறோமே.. இந்த மனுவை வாங்கி என்ன செய்யப்போறீங்க? ஒவ்வொரு தேர்தலுக்கும் நீங்க வந்துட்றீங்களே? எல்லா தேர்தலுக்கும் நீங்க மனு வாங்க வர்றீங்களே? தேர்தல் முடிஞ்சதுக்கு அப்புறம் போயிடறீங்களே? இந்த மனுவெல்லாம் எங்கே கொடுக்குறீங்கன்னு கேட்டால், நாங்க எஸ்.பி.வேலுமணிகிட்ட கொடுத்துருவோம்னு சொல்லிட்டு போயிட்டாரு. அதுக்கு எதற்கு நீங்க இங்கே வர்றீங்கன்னு கேட்டதுக்கு, சண்டை வந்திருச்சு. அடிச்சுப்புட்டாங்க. பெண்களை அடிக்கிறது மட்டும் தி.மு.க.வுக்கு கைவந்த கலை. ஆண்களை அடிச்சா திருப்பி அடிப்பார். அதனால, அடிக்க மாட்டாங்க. பயப்படுவாங்க.
இந்திராகாந்திய அடிச்சாங்க, ஜெயலலிதாவ சேலையைப் பிடிச்சு இழுத்தாங்க, இன்னைக்கு பூங்கொடிய அடிக்கிறாங்க. அடி வாங்கிய எத்தனையோ பேர்.. பெண்கள் அழகு நிலையத்துக்கு போவாங்க. அங்கே போயும் பணம் கேட்டு குத்துவாங்க. ஓட்டல்ல போயி சாப்பிடறாங்க. காசு கேட்டால் அடிப்பாங்க. பிரியாணி கடைக்குப் போவாங்க. நல்லா சாப்பிட்டு கீப்பிட்டு.. காசு கேட்டால், உன் பிரியாணில எலும்பே இல்லைம்பாங்க. அதான் கறி இருந்துச்சுல்லன்னு பதில் சொன்னால் நான் எலும்புல கேட்டேன்னு சொல்லுவாங்க. இப்படி வில்லங்க வியாக்கியானம் பேசிக்கிட்டே கட்சி நடத்துற ஒரு கட்சிதான் தி.மு.க.
பி.ஆர்.சி. தொழிற்சங்கத்தை அடிச்சிக்க ஆளே கிடையாது. டிக்கெட்டை கிழிக்கிற மாதிரி கிழிச்சு ‘யம்மா பார்த்துக்கம்மா ரெட்ட இலைக்கு போடுங்கம்மா..’ சொல்லிக்கிட்டு போயிக்கிட்டே இருக்கலாம். அவங்களும் கண்டக்டர் சொல்லிட்டாருன்னு போயிகிட்டே இருப்பாங்க. இது உங்களுக்கு இருக்கிற பெரிய வாய்ப்பு” என்றார்.