தமிழக அரசியலில் இப்பொது பெரும் பரபரப்பை எட்டியுள்ள செய்தி திமுக,அதிமுகவில் யாருக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கப்படும் என்பது தான்.இன்னும் இரண்டு கட்சிகளும் அதிகாரப் பூர்வமாக அறிவிக்காத நிலையில் கட்சியில் இருக்கும் சீனியர்கள் போட்டி போட்டுகொண்டு நிற்கிறார்களாம்.இந்த நிலையில் திமுகவில் 3 ராஜ்யசபா சீட் யாருக்கு கொடுக்கப்படும் என்று பெரும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.
இதில் தேர்தலுக்கு முன்பே மதிமுக பொது செயலாளர் வைகோவிற்கு ஒரு ராஜ்ய சபா சீட் கொடுக்கப்படும் என்று கூறப்பட்டது இதை திமுக வட்டாரங்களும் அவருக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கப்படும் என்பதை உறுதி செய்துள்ளனர்.இந்த நிலையில் மீதமுள்ள இரண்டு சீட் யாருக்கு என்பது இன்னும் உறுதி செய்யவில்லை என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தமிழக்தில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளது என்று அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் ஒரு விவாதமும் போய்க்கொண்டு இருக்கிறது.
திமுகவில் உள்ள ஒரு சில சீனியர்களும் ராஜ்யசபா சீட்டுக்கு முறையிட வாய்ப்பு உள்ளது என்றும் கூறுகின்றனர்.இந்த லிஸ்டில் சுப்புலட்சுமி ஜெகதீசன்,ரவீந்திரன்,ராதாகிருஷ்ணன்,முத்துசாமி மற்றும் சில சீனியர்களும் உள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. திமுக தலைமை இன்னும் ஓரிரு நாட்களில் ராஜ்யசபா சீட் யாருக்கு என்று அறிவித்து விடும் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.