குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்கள், அரசியல் கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அந்த போராட்டத்தின் அங்கமாக சென்னை பெசன்ட் நகரில் 2வது தெருவில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக கோலமிட்ட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து திமுக உடனடியாக கோலமிடும் போராட்டத்தை அறிவித்தது.
என்னங்கடா Background Music லாம் போட்டு தெறிக்கவிடுறீங்க ?????#DMKkolamProtest#DMKagainstCAA pic.twitter.com/N95HuWVw8Q
— River? (@RiverFiree) December 30, 2019
அதன்படியே அடுத்த நாள் பெருவாரிய நபர்கள் தங்கள் வீட்டில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வேண்டாம் சிஏஏ வேண்டாம், என்ஆர்சி என்று கோலமிட்ட இருந்தார்கள். தற்போது அவ்வாறான அனைத்து கோலங்களையும் திரட்டி இளைஞர் ஒருவர் கோலங்கள் சீரியலின் இசையை அதனுடன் கோர்த்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.