Skip to main content

திமுகவிடம் சிக்கிய எடப்பாடியின் ஆதாரம்!

Published on 20/08/2019 | Edited on 20/08/2019

அதிமுக, திமுக கட்சியினர் சமீப காலமாக கடுமையான விமர்சனங்களை இரண்டு கட்சிகளுமே முன்வைத்து வருகின்றனர். இதில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பால் அதிமுகவில் உட்கட்சி பூசலும் அதிகமாக நிலவி வருகிறது. இதனால் தமிழக அமைச்சரவையில் இடம் பெற கட்சிக்குள் பெரிய பூகம்பமே வெடித்துள்ளது என்கின்றனர். அதிமுக கட்சியினர் திமுக மீது பல்வேறு விமர்சனங்கள் வைத்து வரும் நிலையில், திமுகவிடம் முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சி சம்மந்தமாக ஒரு புகைப்படம் சிக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இது பற்றி விசாரித்த போது,  முதல்வர் சமீபத்தில் சேலம் மாவட்டத்திற்கு சென்ற போது பல்வேறு கட்சியில் இருந்து இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். 

 

dmk



அப்போது முதல்வருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் அட்டையும் பெற்று கொண்டனர். அந்த நிகழ்வின் போது சுரேஷ், சுப்பிரமணி ஆகியோரும் அதிமுகவில் இணைந்தனர். அப்போது முதல்வருடன் நெருக்கமாக பேசிக் கொண்டும், பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்தும் புகைப்படம் எடுத்துள்ளனர். தற்போது இது அரசியலில் பெரும் விமர்சனங்களையும், சர்ச்சையும் ஏற்படுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது. கல்லாநத்தம் சுரேஷ், புங்கன்வாடி சுப்பிரமணி என அழைக்கப்படும் இருவர் மீதும் கொலை, கொள்ளை, மணல் கடத்தல், செம்மரம் வெட்டியது என அத்தனை வகை குற்ற வழக்குகளும் ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல் உள்ளிட்ட சேலம் மாவட்டத்தின் காவல் நிலையங்களில் உள்ளன. 


அதோடு இவர்கள் மீது குண்டாஸ் சட்டமும் போடப்பட்டுள்ளது. இவர்கள் அதிமுகவில் இணைந்தது அனைத்து தரப்பு கட்சியினரும் விமர்சித்து வருகின்றனர். இப்படி இருக்கையில் எதிர்க்கட்சியான திமுக இந்த விவகாரத்தை கையில் எடுத்து அவர்கள் முதல்வருடன் இருக்கும் போட்டோவை விமர்சித்து வருகின்றனர். ஏற்கனவே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொல்லி வரும் எதிர்க்கட்சிகளுக்கு இந்த விவகாரம் நல்ல ஒரு ஆதாரமாக சிக்கியுள்ளது என்கின்றனர்.  

சார்ந்த செய்திகள்