
திருவண்ணாமலை நகரில் கடந்த வாரம் ரஷ்யாவில் இருந்து சுற்றுலா வந்த மாணவி அலீனா, 4 இளைஞர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் இதுவரை நேரடியாக கற்பழித்தவர்கள் என 4 பேர் கைது செய்யப்பட்டனர். வெளிநாட்டு பயணியை முறையான தகவல் பெறாமல் தங்கவைத்த கிரிவலப்பாதையில் ஓம்சக்தி கோயில் எதிரேயுள்ள விடுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய திருவண்ணாமலை தொகுதி எம்.எல்.ஏ எ.வ.வேலு, நகரம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது, மக்கள் தொகை பெருகிறது. இங்கு போதுமான காவல்நிலையங்கள் இல்லை என்பதை முதல்வராக தலைவர் கலைஞர் இருந்தபோது, நான் அமைச்சராக இருந்தபோது, விவகாரத்தை சொல்லி கிழக்கு காவல்நிலையம் என்கிற ஒன்றை உருவாக்கினேன். அந்த காவல்நிலையம் செயல்படுகிறது.
தற்போது ரமணாஸ்ரமம் பகுதியில் வெளிநாட்டினர், வெளிமாநிலத்தினர் பலர் தங்குகின்றனர். இந்த நகரத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான வெளி மாவட்ட, வெளி மாநில பக்தர்கள் வருகிறார்கள். கிரிவலப்பாதையில் அதிகம் தங்குகின்றனர். அப்படி தங்கிய பெண்ணை தான் மானபங்கம் செய்துள்ளார்கள். அம்மா ஆட்சி நடத்துகிறோம் என்பவர்களின் ஆட்சியில் தான் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. அதனால் அதனை கருத்தில் கொண்டு உடனடியாக திருவண்ணாமலை நகர மேற்கு காவல்நிலையம் என்பதை உருவாக்க வேண்டும். குற்றங்களை குறைக்க வேண்டும்.
திருவண்ணாமலையில் நடைபெற்ற வெளிநாட்டு மாணவி கற்பழிப்பு விவகாரத்தை செய்தித்தாளில் படித்தேன். அதுப்போன்று இனி நடக்ககூடாது என்றால் அப்பகுதி பாதுகாப்புக்கு புதிய காவல்நிலையம் உருவாக்க வேண்டும். அம்மா ஆட்சி, அம்மா ஆட்சி என சொல்கிறார் முதல்வராகவுள்ள எடப்பாடி. 2013ல் காவலர்களுக்கு ஓய்வு பெற்றவுடன் தங்க வீடுயில்லாமல் இருக்கிறார்கள். அதனால் வீடுக்கட்டிதரப்படும் என அறிவித்து அரசாணை வெளியிட்டார். திருவண்ணாமலையில் கூட அதற்காக 10 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. இதுவரை அந்த இடத்தில் ஒரு வீடுக்கூட கட்டவில்லை. இதுவரை கட்டிதரவில்லையே என அம்மா ஆட்சி என சொல்லிக்கொள்ளும் எடப்பாடியிடம் கேட்டபோது பதில்ய இல்லை. இது அம்மா ஆட்சியல்ல. சும்மா ஆட்சி, கமிஷன் ஆட்சி என்றவர், திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல்வரிடம் நான் தரப்போகும் முதல் கோரிக்கை திருவண்ணாமலை மேற்கு காவல் நிலையம் உருவாக்க வேண்டும் என்பதே என்றார்.