விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் இயக்கம் சார்பில் சனாதன கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு அண்மையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், உச்ச நீதிமன்றத்தின் அயோத்தி தீர்ப்பு குறித்து விமர்சித்துப் பேசினார். அதில், பாபர் மசூதி இருந்த இடத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் அதற்கு கீழே ஒரு கட்டமைப்பு இருந்ததை குறிப்பிட்டுள்ளனர். அகழ்வாராய்ச்சியில் அது இந்து கோயில், மசூதி, தேவாலயம் என்று அறிய முடியாது. ஆனால், அந்த கட்டமைப்பை வைத்து அறியலாம். குவி மாடமாக இருந்தால் மசூதி என்றும் கூம்பு போல இருந்தால் கிறிஸ்தவ தேவாலயம் என்றும் அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்து கட்டடம் என்று தொல்.திருமாவளவன் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
@ThanthiTV @polimernews @RajtvNetwork @ranganaathan நிறைய அசிங்கமான பொம்மைகள் இருக்கிற இடத்தை ஆசையோட பாக்க வந்த அண்ணனுக்கு@thirumaofficial ஒரு ஓ போடுங்க. Shame M.P. under Constitution of INDIA?? pic.twitter.com/o7Z5VRgTMc
— S.VE.SHEKHER?? (@SVESHEKHER) November 14, 2019
![vck](http://image.nakkheeran.in/cdn/farfuture/fMFpxnVWCvrMjJDBji-jdggxaDoxPlhBFPwrKdhMbbU/1573796977/sites/default/files/inline-images/590_0.jpg)
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோயிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் அர்ச்சகர்களுடன் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்று பரவி வருகிறது. இது குறித்து நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிதவித்துள்ளார். அதில் "நிறைய அசிங்கமான பொம்மைகள் இருக்கிற இடத்தை ஆசையோட பாக்க வந்த அண்ணனுக்கு ஒரு ஓ போடுங்க" என்று கருத்து தெரிவித்துள்ளார்.