தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது. அதேபோல், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று (02/05/2021) காலை 08.00 மணிக்கு தொடங்கிய நிலையில், இன்று (03/05/2021) வரை நீடித்தது.
இதில் திமுக தலைமையிலான கூட்டணி 159 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றிபெற்றது. அதேபோல் அதிமுக கூட்டணி 75 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட விஜய் வசந்த் வெற்றி பெற்றார்.
சட்டமன்றத் தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர்கள் குறித்து பார்ப்போம்!
தி.நகர் சட்டமன்றத் தொகுதி - ஜெ.கருணாநிதி (திமுக) - 137 வாக்குகள் வித்தியாசம்.
மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி - சரஸ்வதி (பாஜக) - 281 வாக்குகள் வித்தியாசம்.
தென்காசி சட்டமன்றத் தொகுதி - பழனி (காங்கிரஸ்) - 370 வாக்குகள் வித்தியாசம்.
மேட்டூர் சட்டமன்றத் தொகுதி - சதாசிவம் (பாமக) - 656 வாக்குகள் வித்தியாசம்.
காட்பாடி சட்டமன்றத் தொகுதி - துரைமுருகன் (திமுக) - 746 வாக்குகள் வித்தியாசம்.
விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதி - ராதாகிருஷ்ணன் (காங்கிரஸ்) - 862 வாக்குகள் வித்தியாசம்.
நெய்வேலி சட்டமன்றத் தொகுதி - சபா ராஜேந்திரன் (திமுக) - 977 வாக்குகள் வித்தியாசம்.
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி - கயல்விழி (திமுக) - 1,393 வாக்குகள் வித்தியாசம்.
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி - வானதி ஸ்ரீனிவாசன் (பாஜக) - 1,728 வாக்குகள் வித்தியாசம்.