நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்கிய நாளில் இருந்தே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமலியில் ஈடுபட்டு வந்தனர். அதனால், அவை அவ்வப்போது ஒத்திவைக்கப்பட்டு வந்தது. கடந்த மார்ச் 5 ஆம் தேதி கரோனா குறித்த விவாதத்தின் போது காங்கிரஸ் எம்.பிக்கள் அமலியில் ஈடுபட்டத்தால் கட்சியைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர், கவுரவ் கொகோய், டிஎன் பிரதாபன், டீன் குரியகோஸ் , உன்னிதன், பென்னி பெஹ்னன், குர்ஜித் சிங் ஆகியோரை பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.
இந்த உத்தரவைக் கண்டித்தும், உடனடியாக இடைநீக்க உத்தரவை ரத்துசெய்யக் கோரியும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வட சென்னை மாவட்ட தலைவர் திரவியம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னை தண்டையார்பேட்டையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்பாட்டத்தில் எச்.வசந்தகுமார் எம்.பி. கலந்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன உரை நிகழ்த்தினார்.