திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக கட்சியில் வடக்கு மாவட்டம் மற்றும் தெற்கு மாவட்டம் என்று இரண்டாக பிரிக்கப்பட்டு, தனித்தனியாக மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயளாலராக இருந்த ராஜன், பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.ராமசந்திரனை தெற்கு மாவட்ட செயலாளராக அதிமுக தலைமை நியமனம் செய்தது. தெற்கு மாவட்டத்தில் இருந்த கீழ்பென்னாத்தூரை பிரித்து வடக்கு மாவட்டத்தில் இணைத்து, வடக்கு மாவட்டத்தில் இருந்த ஆரணியை தெற்கு மாவட்டத்தில் இணைத்து அமைச்சருக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.ராமசந்திரன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திருவண்ணாமலை வந்திருந்தார்.
பொறுப்புக்கு வந்ததும் திருவண்ணாமலை நகருக்கு வந்து அம்பேத்கர், பெரியார், அண்ணா சிலைகளுக்கு கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்தார். இதில் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்.
தெற்கு மாவட்ட எல்லையை மாற்றியமைத்ததற்கு அதிர்ப்தியடைந்தும், தனக்கு மா.செ தராமல் அமைச்சருக்கு தந்ததோடு அவருக்காக மாவட்ட எல்லையில் மாற்றம் செய்ததால் அதிருப்தியடைந்துள்ளார். இதனால் அமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை சட்டமன்ற உறுப்பினர் புறக்கணித்தது அதிமுக கட்சினரிமையே சலசலப்பை ஏற்டுத்தியுள்ளது.