சொத்துகுவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 வருடம் சிறை தண்டனை விதித்தது கடந்த 2017 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா தற்போது 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறைவு செய்துள்ளார். இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே தண்டனை உள்ளது என்கின்றனர்.
இந்த நிலையில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் மகன் திருமணம் வரும் மார்ச் 5ஆம் தேதி நடைபெற உள்ளதால் இந்த திருமணத்தில் சசிகலா கலந்து கொள்ள கட்டாயம் வருவார் என்று சசிகலா தரப்பு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த திருமணத்தில் கலந்து கொள்ள சசிகலா கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பரோலுக்கு ஏற்பாடு செய்யும்படியும் தனது வழக்கறிஞரிடம் அவர் அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறிவருகின்றனர். இதற்கு முன்பு சசிகலா தனது கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த போதும், அவர் உயிர் இழந்த போதும் பரோலில் வந்தார் என்பது குறிப்படத்தக்கது. அதோடு சமீபத்தில் அதிமுகவினர் பலர் சசிகலா விடுதலை பற்றி பேச ஆரம்பித்துள்ளதால் சசிகலா பரோலில் வரும் போது ரகசியமாக சந்திக்கவும் திட்டம் போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் எடப்பாடி தரப்பு அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.