மூன்று நாட்களுக்கு முன்பு, கர்நாடக சிறையில் இருக்கும் சசிகலாவை, இளவரசி மகன் விவேக், நடராஜனின் தம்பி பழனிவேல் உள்ளிட்டோருடன் சந்தித்து இருக்கிறார் தினகரன். அ.தி.மு.க. பொதுக்குழுவில் பேசப் பட்ட விசயங்கள் பற்றி சசிகலாவிடம் முழுமையாக எடுத்துச்சொல்லியிருக்கிறார். இதைக்கேட்ட சசிகலா, காலம் நமக்கு விரைவில் கனியும். துரோகிகளுக்கு விரைவில் தக்க பாடம் புகட்டுவோம் என்று இறுகிய முகத்தோடு சொல்லியிருக்கிறார். பின்னர், விவேக்கிடம் ஜெயா டி.வி. நிர்வாகம் குறித்தும், மிடாஸ் நிறுவன வருவாய் குறித்தும் பல விபரங்களை கேட்டிருக்கிறார்.
இதேபோல் பழனிவேலிடமும் அவருடன் சென்ற ஜோதிடர் ஒருவரிடமும், தன் கணவர் நடராஜன் பெயரில் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை பற்றிய விபரங்களையும் விசாரித்துள்ளார் என்கின்றனர். இந்த நிலையில் தற்போது சசிகலாவுக்கு, தஞ்சையில் மானம்புச்சாவடி எஸ்.பி.ஜி. மிஷன் சாலையில் சொந்தமாக வீடு மற்றும் காலியிடம் ஒன்று உள்ளது.இந்த வீடு யாரும் தங்க முடியாத அளவுக்கு இடியும் நிலையில் இருப்பதால் மாநகராட்சி அதிகாரிகள் இடிக்க வீட்டின் வாசலில் நோட்டீஸ் ஒட்டிவிட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் தற்போது சசிகலா தரப்பிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.