கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகள், புது வேட்பாளர்களின் தொகுதிகளில் தி.மு.க.விடம் வேகம் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, ஆர்.கே.நகர் தி.மு.க. வேட்பாளர் எபிநேசருக்கு மா.செ., பகுதிச் செயலாளர்களின் ஒத்துழைப்பு சரியா இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அதிமுக வேட்பாளருக்கு இணையாக கரன்சி இல்லாததால் ஒத்துழைப்பு சரியாக இல்லை என்று கூறப்படுகிறது.
அதிமுக வேட்பாளரான ஆர்.எஸ்.ராஜேஷ், தனக்கு வாக்குகளை ஈர்க்கும் நிர்வாகிகளுக்கு அள்ளித் தருகிறார். ஆர்.கே.நகரில் பணமழை பொழிகிறது என்று பேச்சு வெளிப்படையாகவே காதில் விழுகிறது. இருப்பினும் ஆளும் கட்சி மீதான கோபம், அதிருப்தி திமுகவுக்கு பலம் சேர்க்கும் என்று திமுக வேட்பாளர் எபிநேசர் நம்பிக்கையுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கட்சிக்குள் சிலர் உள்குத்தில் ஈடுபடுவது, சித்தரஞ்சன் சாலையின் கவனத்துக்கு சென்றுள்ளது. இதையடுத்து உள்குத்துப் பேர்வழிகளுக்கு கடுமையான எச்சரிக்கைடிய விடுத்துள்ளது திமுக தலைமை.
இந்தநிலையில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் எபிநேசருக்கு இன்று வாக்கு சேகரித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இதையடுத்து திமுக வேட்பாளருக்கு கூடுதல் தெம்பு கிடைத்துள்ளது. பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று திமுகவினர் இந்த தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.