Skip to main content

நீங்கள் கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும் அன்புமணி பதில் சொல்லுவார்: ராமதாஸ்

Published on 19/02/2019 | Edited on 19/02/2019

 

பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக-பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். மேலும், 21 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலிலும் அதிமுக போட்டியிடும் என்றும், இந்த தொகுதிகளில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு அளிக்கும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். 

 

aiadmk - pmk alliance


அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக போட்டியிடும் 7 தொகுதிகள் என்னென்ன என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ராமதாஸ், பாமக - அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்கான காரணங்களை பிரத்தியேகமான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அன்புமணி ராமதாஸ் சொல்ல இருக்கிறார். நீங்கள் கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும் அவர் பதில் சொல்லுவார் என தெரிவித்தார். 

 

சார்ந்த செய்திகள்