Skip to main content

ரஜினிகாந்த் நடத்திய ஆலோசனைக் கூட்டம்! உள்ளேயும் வெளியேயும்? (படங்கள்)

Published on 05/03/2020 | Edited on 05/03/2020

 

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் 37 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றிருந்தனர். 
 

சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நடந்த ஆலோசனையில் தற்போதைய அரசியல் சூழல் குறித்தும், கட்சி தொடங்குவது தொடர்பாகவும், கட்சியின் கொடி, பூத் கமிட்டி உறுப்பினர்கள் சேர்க்கும் பணியை விரைவுப்படுத்துவது குறித்தும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

ஆலோசனை கூட்டத்திற்கு பின் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், "கட்சி தொடங்குவது பற்றி ஓராண்டுக்கு பின் மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினேன். மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்ததில் ஒரு விஷயத்தில் எனக்கு திருப்தியில்லை; ஏமாற்றமே. திருப்தியில்லாத, ஏமாற்றமடைந்த விஷயம் என்னவென்று  பின்னர் கூறுகிறேன். சி.ஏ.ஏ விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு இஸ்லாமிய அமைப்பினருடன் கூறினேன். பேச்சுவார்த்தை நடத்த என்னால் முடிந்த வரை உதவி செய்வதாகவும் கூறினேன். தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவது பற்றி நேரம் தான் பதில் சொல்ல வேண்டும்." இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்