Skip to main content

கமல் சார்... நீங்க கட்சியை ஆரம்பித்து கட்சியை வித்துட்டீங்க... அதுதான் உண்மை... ம.நீ.மய்யத்திலிருந்து விலகிய தொழிலதிபர்

Published on 26/03/2019 | Edited on 26/03/2019

 

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாகவும், சுயேட்சையாக திருப்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும், ஆடியோ ஒன்றை வெளியிட்டள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வெங்கடேசன். இந்த ஆடியோ அப்பகுதியில் அக்கட்சியினர் மத்தியில் பரவி வருகிறது.
 

அவர் அந்த ஆடியோவில், 
 

''வணக்கம். நான் திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வெங்கடேசன். திருப்பூர் தொகுதிக்கு சந்திரகாந்த் என்பவரை அறிவித்துள்ளீர்கள். அவர் யார் என்றே தெரியாது. ஆனால் திருப்பூர் மாவட்டத்திற்கு பாடுபட்டு வேலை செய்ததில் என்னுடைய பங்கு ஒரு வருடம். கமல் கே. ஜீவா (மக்கள் நீதி மய்யம் திருப்பூர் மேற்கு, பல்லடம் தொகுதி பொறுப்பாளர்) என்பவர் 30 வருடம் உழைத்திருக்கிறார்.



என்னால் 40 அல்லது 50 லட்சம் ரூபாய் செலவு செய்ய முடியும் என்று சொல்லியிருந்தேன். ஜீவா 20 லட்சம் ரூபாய் செலவு செய்ய முடியும் என்று சொல்லியிருந்தார். நாங்க இரண்டு பேரும் இணைந்ததற்கு திருப்பூரோ, ஈரோடோ ஒதுக்கியிருந்தால்... கமல் சார் நான் உங்களுக்காகத்தான் பேசுறதே... சரியிங்களா...

 

kamal-vengadesan thirupur



மிகப்பெரிய செலவு பண்ணியதோடு அல்லாமல், மிகப்பெரிய மன வருத்தத்தோட நாங்க வெளியில போறோம். வெளியில போறோம் என்கிறதை லெட்டர் எழுதி கொடுக்கும் அளவுக்கு நாங்க படிச்சவங்க கிடையாது. ஆனால் மக்கள் மத்தியில் எங்களுக்கு ஒரு பெயர் இருக்கிறது. நீங்க மக்கள் நீதி மய்யம் சார்பாக சந்திரகாந்த் என்கிற ஒருவரை நிறுத்தியிருக்கீங்க திருப்பூரில்.


ஆனால் எத்தனை பேருக்கு வருத்தம் இருக்கிறது தெரியுமா? அவருக்கு எதிராக சுயேட்சையாக நான் வேட்பு மனு தாக்கல் செய்கிறேன். எனக்கு 100 ஓட்டு விழுந்தாலும் சரி, 10 ஓட்டு விழுந்தாலும் சரி, ஒரு ஓட்டு விழுந்தாலும் சரி. ஆனால் நீங்க நிறுத்தினவருக்கு எவ்வளவு எதிர்ப்பு இருக்கிறது என தெரிஞ்சுக்கோங்க. 

 

காரணம், நீங்க கட்சியில வைத்திருக்கும் துணை தலைவராகட்டும், பொதுச்செயலாளராகட்டும் எல்லாருமே துரோகிகள்தான். நீங்க நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் நல்லவர்கள் என்று. நீங்க கட்சியை ஆரம்பித்து கட்சியை வித்துட்டீங்க. அதுதான் உண்மை. 



கஜா புயலாக இருக்கட்டும், பொள்ளாச்சி நிகழ்ச்சியாகட்டும் எதுவாக இருந்தாலும் என்னுடைய 20 ஆயிரம், 50 ஆயிரம், 25 ஆயிரம், 10 ஆயிரம் என எல்லாம் என்னுடைய சொந்தக் காசு, என் குழந்தைகளுக்காக சம்பாதித்து வைத்திருந்த காசுதான். அரசியல்ல ஆர்வம் இருப்பதால்தான் வந்தேன். மக்கள் நீதி மய்யம் கட்சி வளருமே என்பதற்காகத்தான் செலவு செய்தேன்.'' இவ்வாறு அந்த ஆடியோவில் பேசியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்