தமிழகத்தில் 18 தொகுதி இடைத்தேர்தல் அறிவித்த நிலையில் அமமுக 17 தொகுதியிலும் இடைநீக்கம் செய்யப்பட்ட அதே வேட்பாளர்கள் நிற்பார்கள் என்று அறிவித்தார் டிடிவி.
மீதமுள்ள ஒரு தொகுதியில் வி.புகழேந்தியை வேட்பாளாரக டிடிவி அறிவித்தார். அ.தி.மு.க. வேட்பாளராக பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி ஜோதி, தி.மு.க. சார்பில் சத்யா, அ.ம.மு.க. வி.புகழேந்தி என மும்முனைப் போட்டி நிலவுகிறது என்றாலும், அதிமுக ஜோதிக்கும் திமுக சத்யாவுக்கும் தான் போட்டியாக இருக்கிறது.
மாதேஷ் புகழேந்தி
அமமுக வேட்பாளரான புகழேந்திக்காக, ஒரு பூத்துக்கு 30 பேர் வீதம் ஒரு நாளைக்கு 500 ரூபாய் தினக்கூலியுடன் உணவு கொடுத்து கட்சி பணியை செய்து வருகிறார் ஓசூர் மா.செ.வான மாதேவப்பா. ஆர்.கே நகர் பாணியில் மீண்டும் இருக்குமோ என்ற அச்சம் அதிமுகவிரிடையே நிலவுகிறது.
இதற்கிடையில் திமுகவில் ஓசூர் நகரச் செயலாளராக இருந்த மாதேஷ் தற்போது தனித்து போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். திமுக வாக்கு வங்கியை அவர் பிரித்தாலும் அது திமுகவுக்கு அடியாகவே இருக்கும் பட்சத்தில், எப்படிப் பார்த்தாலும் திமுக அதிமுக இருமுனைப் போட்டியாகத்தான் நிலவும் என்பதே ஓசூர் கள நிலவரமாக இருக்கிறது.