வரும் சட்டமன்ற தேர்தலை பிரசாந்த் கிஷோருடன் இணைந்து தி.மு.க. சந்திக்கும் என மு.க. ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இதுபற்றி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். தி.மு.கவிற்கு ஆலோசனைகளைக் கூற நியமிக்கப்பட்டிருக்கும் பிரசாந்த் கிஷோர் டீம் பல்வேறு அதிரடி மாற்றங்களை திமுகவில் கொண்டு வர திட்டம் போட்டு வருவதாக சொல்கின்றனர். குறிப்பாக வரும் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர் தேர்வில் அதிக கவனம் செலுத்தி வருவதாக சொல்கின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஆந்திரா சட்டசபை தேர்தலிலும்,டெல்லி சட்டமன்றத் தேர்தல் ரிசல்டிலும் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைகள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து பிகேவின் அடுத்த வியூகம் தமிழகத்தில் திமுக கட்சிக்கும், மேற்கு வங்காளத்திற்கு மம்தா கட்சிக்கும் ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர். பிரசாந்த் கிஷோரால் தான் பிஜேபி வெறும் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றது என்று பாஜக தலைமை நினைப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் பிகே மீது ஆத்திரத்தில் இருக்கும் பிஜேபி அடுத்ததாக தமிழகம் மற்றும் மேற்கு வங்காளத்தில் பிகேவின் வியூகத்தை முறியடிக்க சில திட்டங்களை வகுத்துள்ளதாக சொல்கின்றனர்.
இதனால் தமிழகத்தில் பிரசாந்த் கிஷோரின் வியூகத்தை அறிந்து அதை முறியடிக்கும் முயற்சியில் பாஜக தீவிர முயற்சியில் இறங்கியிருப்பதாக சொல்கின்றனர். இதனை அறிந்த திமுக மற்றும் பிரசாந்த் கிஷோர் டீம் பாஜகவிடம் அலெர்ட்டாக இருப்பதாக சொல்கின்றனர்.