Published on 23/07/2018 | Edited on 23/07/2018
டெல்லியின் பார்வை ஓபிஎஸ் மீது நீண்ட நாட்களாக படாமல் இருந்தது. இந்நிலையில், துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு மூலமாக டெல்லி பாஜக மூத்த தலைவர்களை சந்திக்க அனுமதி கிடைத்துள்ளது.
இதையடுத்து இன்று டெல்லி செல்லும் ஓபிஎஸ், நாளை (24.07.2018) டெல்லியில் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத்சிங் ஆகியோரை சந்திக்கிறார். பாஜக தலைவர் அமித்ஷாவை சந்திக்கவும் முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனால், அமித்ஷா இந்த நேரம் வரை ஓபிஎஸை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை.
இந்த சந்திப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான விசயங்களை பாஜவிடம் ஓ.பி.எஸ். தெரிவிக்க இருப்பதாக அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.